யானையின் தாக்குதலில் உயிரிழந்த குடும்பஸ்தர்

Sri Lankan Peoples Elephant Eastern Province Death Sri Lanka Elephants
By Rakshana MA Aug 02, 2025 07:45 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி நெல்லிக்காட்டில் இன்று (02) அதிகாலை 1.30 மணிக்கு யானைதாக்கி 4 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று (01) இரவு நெல்லிக்காட்டு கிராமத்திற்குள் புகுந்த யானை, வீட்டின் முன்பகுதியில் வைத்து மாணிக்கம் இராமலிங்கம் என்பவரை தாக்கியுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அறிய கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போரதீவுப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் த.கயசீலன் படுகாயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.

செம்மணி மனித புதைகுழி விவகாரம்! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

செம்மணி மனித புதைகுழி விவகாரம்! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

யானை தாக்குதல்

மேற்படி களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானையின் தாக்குதலில் உயிரிழந்த குடும்பஸ்தர் | Elephant Kills Father Of Four Childs In Batticaloa

மேலும், இவ்வாறு உயிரிழந்தவரின் சடலமானது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது குறித்த நடவடிக்கைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

நாட்டின் பொருளாதாரத்தில் கை வைக்கும் அமெரிக்கா..!

நாட்டின் பொருளாதாரத்தில் கை வைக்கும் அமெரிக்கா..!

செம்மணி மனித புதைகுழி விவகாரம்! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

செம்மணி மனித புதைகுழி விவகாரம்! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery