நாட்டின் பொருளாதாரத்தில் கை வைக்கும் அமெரிக்கா..!
அமெரிக்காவின் முப்பது சதவீத வரி விதிப்பு எமது நாட்டினுடைய பொருளாதாரத்தை நேரடியாக தாக்குகின்றது என முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் (Abdullah Mahroof) தெரிவித்தார்.
கிண்ணியாவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (01)இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம் உலகளாவிய ரீதியாக தன்னுடைய இறக்குமதி பொருட்களுக்கு வரி விதிப்பொன்றை செய்த போது இலங்கை நாட்டுக்கு 44 சதவீத வரியை அறவிட முயற்சித்த போது அது தொடர்பாக எமது நாட்டினுடைய உயர்மட்ட அதிகாரிகள் பேச்சு வார்த்தை மூலமாக அதனை 30 சதவீதமாக குறைத்திருக்கிறார்கள்.
குறைக்கப்பட்ட வரி
இலங்கை ஏற்றுமதி, இறக்குமதி என்ற வகையில் எங்களுடைய ஏற்றுமதி பொருட்கள் ஆடை உற்பத்தி பொருட்கள் குறிப்பாக பாரியதொரு GSP வரியை கூட கொண்டு வந்தது.
அந்த நேரத்தில் ட்ரப் அரசாங்கம், நாங்கள் அவர்களுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 84 சதவீதத்தை விதிக்கின்றோம் என கூறி 44 சதவீதத்தை அவர்கள் எமது நாட்டுக்கு ஏற்றுமதி செய்கின்ற பொருட்களுக்கு வரியை விதித்தார்கள்.
இது எங்களுடைய ஆடை உற்பத்தியில் கணிசமான அந்நிய செலவாணியை மீட்டித் தருகின்ற பாரியதொரு பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
இப்போது 30 சதவீதம் என்று கூறினாலும் கூட மலேசியா போன்ற நாடுகள் அதிகமான ஆடை உற்பத்திகளை செய்து பங்களாதேஷ் போன்ற நாடுகளும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கின்றது.
இதனடிப்படையில் சிந்திக்கின்ற போது எமது உற்பத்திகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் நாங்கள் கணிசமான அந்நியச் செலவாணியை கூட்டிக் கொள்ள முடியும் என்கின்ற போது 30 சதவீத வரியை அறவிட நினைக்கிறார்கள்
இது தற்போது கடனில் மூழ்கியிருந்த எமது அரசாங்கம் ரணில் விக்ரமசிங்கவுடைய ஆட்சியின் போது அந்நியச் செலவாணியை கணிசமான அளவுக்கு பெற்றுக்கொள்வதற்கு அமெரிக்க டொலரினுடைய பெறுமானத்தை 284 ரூபாவுக்கு குறைத்த போது கனிசமான அந்நிய செலவாணி எஞ்சியது.
பொருளாதாரத்தில் நேரடி தாக்கம்
இப்போது அதே வருமானம் உல்லாச துறைக்கு ஊக்குவித்ததன் காரணமாக விரிவடைந்து காணப்படுகிறது. இந்த 30 சதவீத அமெரிக்க டொலருடைய தாக்கம் எமது பொருளாதாரத்தை நேரடியாக தாக்குகின்றது.
உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்கின்ற போது, கிராமிய உற்பத்திகள் அதன் நிலையை அடையவில்லை. அதற்கு இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் போகின்ற போது நாம் அதிகூடிய நிதியை பெற்று கடனை அடைக்க வேண்டிய சூழல் ஒன்று வருகின்ற போது எமது நேரடியான பாரிய தாக்கத்தை இந்த 30 சதவீத வரி எமக்கு உருவாக்கும்.
அதன்படி, 31 உடன் முடிவடைகின்ற காலக்கேட்டின் பிரகாரம் இன்னும் பேச்சுவார்தை மூலம் என்கின்ற போலித் தனமான செய்தி எங்களை நாங்களே ஏமாற்றுகின்ற விடயமாகும்.
இந்த விடயத்தில் கடந்த மூன்று மாத காலத்தை உருப்படியாக இந்த வரி விதிப்பினை கணிசமான அளவு குறைப்பதற்கான எந்தவொரு முன் நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்பதே தனது கருத்தாகும் என சுட்டிக்காட்டினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |