மின் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Sri Lankan Peoples Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices
By Rakshana MA Dec 11, 2024 05:35 AM GMT
Rakshana MA

Rakshana MA

மின் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்க முடியும் என்ற எமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்று(10) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மின்சாரசபை ஊழியர்களுக்கு எவ்வித விசேட கொடுப்பனவையும் வழங்காமலிருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஆளுநருக்கும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதிய பிரதிநிதிக்கும் இடையில் சந்திப்பு

கிழக்கு ஆளுநருக்கும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதிய பிரதிநிதிக்கும் இடையில் சந்திப்பு

தீர்மானம்

மின்கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாகவுள்ளோம்.

கடந்த அரசாங்கத்தால் மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட பணம் தொடர்பான தரவினை அடிப்படையாகக் கொண்டே நாம் அந்த கருத்தினை முன்வைத்தோம்.

மின் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல் | Electricity Bill In Sri Lanka

எதிர்வரும் 6 மாதங்களுக்கு மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பின்னர் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும்.

கொடுப்பனவு

மின் கட்டணத்தில் திருத்தம் கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே மின் கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொண்டு மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவோம்.

மின் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல் | Electricity Bill In Sri Lanka

நாம் அரசாங்கத்தைப் பொறுப்பேற்ற போது இலங்கை மின்சாரசபையில் மக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட பணத்தில் பாரிய தொகை செலவிடப்பட்டிருந்தது.

எனவே தற்போது மின் கட்டணத்தை அதிகரிக்காமல் பேணுவதற்கான நடவடிக்கைகளையே மின்சாரசபை முன்னெடுக்க வேண்டியுள்ளது.எனவே எதிர்வரும் 6 மாதங்களுக்கு அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.'' என சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் லங்கா ஐஓசி அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் லங்கா ஐஓசி அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

நாட்டு மக்களுக்கு அநுர விடுத்துள்ள வேண்டுகோள்

நாட்டு மக்களுக்கு அநுர விடுத்துள்ள வேண்டுகோள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW