இதுவரையான தேர்தல் வாக்களிப்பு வீதம்
10வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் தற்போது வாக்குவீதங்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் இன்று காலை 7 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையிலும் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.
வாக்கு வீதம்
வாக்கெடுப்பு ஆரம்பமானது முதல் 10 வரையிலும் இடம்பெற்ற வாக்கெடுப்பின் வீதங்கள்,
கொழும்பு 20%, கண்டி 25 %, நுவரெலியா 20 %, பதுளை 21 %, திகாமடுல்ல 18 %, மட்டக்களப்பு 15 %, கேகாலை 20 %, புத்தளம் 22 %, மாத்தறை 10 %, களுத்துறை 20 %, திருகோணமலை 23 %, குருநாகல் 22 %, பொலன்னறுவை 22 %, யாழ்ப்பாணம் 16%, இரத்தினபுரி - 20% மற்றும் களுத்துறை மாவட்டத்தில் 20% ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறை தேர்தலில் ஒரு கோடியே 7, 140, 354 பேர் வாக்களிப்பதற்காக தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |