முட்டை விலை அதிகரிப்பு குறித்து வெளியான தகவல்

Sri Lanka Economy of Sri Lanka Egg
By Shalini Balachandran Nov 13, 2024 07:41 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

முட்டை ஒன்றின் விலை 60 ரூபா தொடக்கம் 65 ரூபா வரை அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்றைய தினம் (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

உற்பத்தி சார் விலைகள் மும்மடங்கு அதிகரிப்பால் கோழி தீவனத்தை உற்பத்தி செய்ய முடியாத நிலையை அடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆட்பதிவுத் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்

ஆட்பதிவுத் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்

முட்டை உற்பத்தி

இன்று ஒரு முட்டையின் உற்பத்தி விலை சுமார் 38 ரூபாய் ஆனால் விவசாயி ஒரு முட்டையை 30 தொடக்கம் 31 ரூபாய்க்கு 7 ரூபாய் நஷ்டத்தில் விற்பனை செய்வதால் பலரும் பண்ணை உற்பத்தியினை கைவிட்டுள்ளனர்.

முட்டை விலை அதிகரிப்பு குறித்து வெளியான தகவல் | The Price Of Eggs Will Increase Ranil

இந்தநிலையில், கிறிஸ்மஸ் பண்டிகையினை முன்னிட்டு முட்டை விலை 60 தொடக்கம் 65 ரூபாய் வரைக்கும் செல்லும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அரச அதிகாரிகளுக்கு வெளியான அறிவிப்பு

தேர்தல் பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அரச அதிகாரிகளுக்கு வெளியான அறிவிப்பு

வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவுறுத்தல்

வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவுறுத்தல்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW