ஆட்பதிவுத் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்
ஆட்பதிவுத் திணைக்களத்தின் தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் ஒரு நாள் சேவைகள் அனைத்தும் நாளை(14) நடைபெறாது என தகவல் வெளியிட்டுள்ளது.
ஆட்பதிவு திணைக்களம் (Department for Registration of Persons) வெளியிட்டுள்ள அறிவித்தலிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாளை குறித்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பணிக்காக அரச அதிகாரிகள் நியமனம்
தேர்தல் தினத்தன்று திணைக்கள அதிகாரிகள் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட காரணத்தினாலேயே சேவைகள் முன்னெடுக்கப்படாது என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக தேசிய அடையாள அட்டை உட்பட இதர சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக நாளை திணைக்களத்திற்கு வருகை தருவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு கோரிக்கைவிடுத்துள்ளது.
இதேவேளை நாளை இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் 8,888 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், 71 இலட்சத்து 40,354 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |