நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஜனாதிபதி தேர்தல்! செஹான் சேமசிங்க

Shehan Semasinghe Election
By Mayuri Aug 13, 2024 02:59 AM GMT
Mayuri

Mayuri

எதிர்வரும் தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் தீர்மானமிக்க தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ளது. நெருக்கடியில் வீழ்ச்சியடைந்த நாடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தினால் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டது.

ஜனாதிபதி ரணில் மீது முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு

ஜனாதிபதி ரணில் மீது முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு

எனவே நாடு மீண்டும் வீழ்ச்சியடையாதிருக்க வேண்டுமாயின் ஜனாதிபதி இந்த நாட்டை தொடர்ந்தும் முன்கொண்டு செல்ல வேண்டும். சிறந்த பொருளாதார முகாமைத்துவத்தினை நிர்வகிக்க உலக நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருளாதார பொறிமுறைகளின் கீழ் செயற்பட வேண்டும்.

வங்குரோத்து நிலை

அவ்வாறு செயற்படும் பட்சத்திலேயே மீண்டும் ஒரு வங்குரோத்து நிலை ஏற்படுவதிலிருந்து தவிர்க்க முடியும். எனவே நடைபெறவுள்ள தேர்தலானது நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாகும்.

நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஜனாதிபதி தேர்தல்! செஹான் சேமசிங்க | Election In Sri Lanka

எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வெற்றி பெறச்செய்வதற்காக மக்கள் அணிதிரண்டுள்ளனர்.

நாட்டில் ஆட்சியமைக்கும் கனவில் உள்ள பலர் நாடு நெருக்கடியை எதிர்கொண்ட சந்தர்ப்பத்தில் தீர்மானங்களை எடுக்க தவறினர்.

இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 42 மில்லியன் பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 42 மில்லியன் பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திசாநாயக்க ஆகியோரின் இயலாமை கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிப்படுத்தப்பட்டது என கூறியுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW