ஜனாதிபதி ரணில் மீது முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு
நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உயர் நீதிமன்றின் உத்தரவினையும் மீறி புதிய மதுபான விற்பனை நிலைய உரிமங்களை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சட்டவிரோதமான முறையில் 200 கலால் அனுமதி பத்திரங்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவில், இலங்கை மதுபான உரிமதாரர் சங்கம் முறைப்பாடு செய்துள்ளது.
இந்த முறைப்பாட்டை நேற்று(12) தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.
முறைப்பாடு
இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை மதுபான உரிமதாரர் சங்கத்தின் உப தலைவர் பிரசன்ன விதானகே, “தற்போதைய ஜனாதிபதியும் நிதி அமைச்சரும் இந்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், முந்தைய திகதியிட்டு சுமார் 6 புதிய உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கலால் திணைக்களத்தின் தலைவராகவும் அவரே உள்ளார்.
கலால் திணைக்களம் தற்போது 200க்கும் மேற்பட்ட புதிய கலால் அனுமதி பத்திரங்களை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.''என கூறியுள்ளார்.