தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம்

Sri Lanka Politician Sri Lankan Peoples Eastern Province Local government Election Sammanthurai
By Rakshana MA Apr 17, 2025 01:00 PM GMT
Rakshana MA

Rakshana MA

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சம்மாந்துறை(Sammanthurai) பிரதேச சபை கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டமானது நேற்று(16) மாலை சம்மாந்துறை பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்மாந்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி கே.டீ.எச்.ஜெயலத் வழிகாட்டலில், சம்மாந்துறை பிரதேச சபை தேர்தல் நடவடிக்கைக்கான பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

அச்சத்தில் நிதி ஒதுக்கீடு செய்தாரா அநுர..! கேள்வி எழுப்பும் சாணக்கியன்

அச்சத்தில் நிதி ஒதுக்கீடு செய்தாரா அநுர..! கேள்வி எழுப்பும் சாணக்கியன்

கலந்துரயாடலில்..

இதன்போது 2025 உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய சட்டங்கள், பொலித்தீன் பாவிப்பது தொடர்பில் தெளிவூட்டல், சட்டவிரோமாக தேர்தல் போஸ்டர்கள் ஒட்டுதலை தவிர்த்தல், தலை கவசமின்றி தேர்தல் பிரச்சாரம் செய்வதை தவிர்த்தல், சட்டவிரோதமாக ஊர்வலம் செல்வதை தவிர்த்தல், சட்டவிரோத ஒலிபெருக்கி பாவனையை குறைத்தல் தொடர்பான தெளிவூட்டலை வழங்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் | Election Consultation Meeting At Sammanthurai

அத்துடன், பிரச்சாரத்தின் போது பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் மற்றும் வேட்பாளர் ஒருவர் பிரச்சாரத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

இது தவிர தேர்தல் தொடர்பான தற்போதைய நிலைமைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

மேலும், குறித்த கலந்துரையாடலில் சம்மாந்துறை பிரதேச சபையில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழு வேட்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

உச்சம் தொட்ட தங்க விலை!

உச்சம் தொட்ட தங்க விலை!

வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புவோருக்கு அறிவித்தல்

வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புவோருக்கு அறிவித்தல்

           நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW   


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery