பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு

Election Commission of Sri Lanka Anura Kumara Dissanayaka Election
By Laksi Sep 24, 2024 09:03 AM GMT
Laksi

Laksi

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டவுடன் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுத் தேர்தல் தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதுவரை தேர்தல்கள் ஆணைக்குழுவை உத்தியோகபூர்வமாக தொடர்பு கொள்ளவில்லை. இருப்பினும், அது எப்போது நடக்கும் என்பதற்கான தீர்மானங்கள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அநுரவுடன் இணைந்து பணியாற்ற தயார்: சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு

அநுரவுடன் இணைந்து பணியாற்ற தயார்: சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு

பொதுத் தேர்தல் 

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டவுடன், வேட்பாளர்கள் வேட்புமனுக்களை 7 முதல் 17 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு | Election Commission Notification General Election

அதன் பின்னர் ஐந்து முதல் ஏழு வாரங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதி ஜனாதிபதியால் ஒதுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இறுதி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர: சுனில் ஹந்துன்நெத்தி

இலங்கையின் இறுதி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர: சுனில் ஹந்துன்நெத்தி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW