அநுரவுடன் இணைந்து பணியாற்ற தயார்: சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு
நாட்டின் 9 ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு தாம் தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியம் கடன் உதவியை வழங்கி வருகின்றது.
புதிய அரசாங்கம்
இந்தநிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதோடு, புதிய அரசாங்கத்துடன் பணியாற்றத் தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மூன்றாவது மதிப்பாய்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரைவில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |