பொதுத் தேர்தலில் போட்டியிட்டோருக்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு

Election Commission of Sri Lanka Sri Lanka Local government Election Parliament Election 2024
By Laksi Dec 06, 2024 11:07 AM GMT
Laksi

Laksi

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் தொடர்பான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை வழங்குவதற்கான காலக்கெடு இன்று (06) நள்ளிரவுடன் முடிவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 தேர்தலில் போட்டியிட்ட 8361 வேட்பாளர்களில் 1985 பேர் மட்டுமே அந்த அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாக அதன் தலைவர் ஆர்.எம்.எல்ஏ.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

690 அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களில் இதுவரை 106 அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் மட்டுமே உரிய சமர்ப்பிப்புகளைச் செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சம்மாந்துறையில் இரண்டாம் மொழி சித்தியடைந்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

சம்மாந்துறையில் இரண்டாம் மொழி சித்தியடைந்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

சட்ட நடவடிக்கை

மேலும் தேசிய பட்டியலில் அறிவிக்கப்பட்ட 527 வேட்பாளர்களில் 57 பேர் மாத்திரமே வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளைக் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலில் போட்டியிட்டோருக்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு | Election Commission Deadline Ends Today

குறித்த காலத்திற்குள் உரிய அறிக்கைகளை வழங்காத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில் உள்ளுராட்சி சபை தேர்தலை விரைந்து நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

கல்முனை கிட்டங்கி பால நிர்மாணிப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கல்முனை கிட்டங்கி பால நிர்மாணிப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW