சம்மாந்துறையில் இரண்டாம் மொழி சித்தியடைந்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Ampara Sri Lanka Eastern Province
By Laksi Dec 06, 2024 07:07 AM GMT
Laksi

Laksi

சம்மாந்துறையில் அரச ஊழியர்களுக்கான 100 மணித்தியாலம் கொண்ட இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி நெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது நேற்று (05) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபா தலைமையில் செயலக கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த பயிற்சி நெறியானது நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் இயங்கும் (ONUR) நிறுவனத்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி பங்களிப்பின் கீழ் நடத்தப்பட்டுள்ளது.

கல்முனை கிட்டங்கி பால நிர்மாணிப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கல்முனை கிட்டங்கி பால நிர்மாணிப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

சான்றிதழ் 

இதன்போது, பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன் கலந்து கொண்டு இரண்டாம் மொழி சித்தியடைந்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

சம்மாந்துறையில் இரண்டாம் மொழி சித்தியடைந்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு | Certificate Giving Event Sinhala In Sammanthurai

மேலும் இந் நிகழ்வில் கெளரவ அதிதிகளாக உதவிப் பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம் (LLB),பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம் அஸ்லம்,விசேட அதிதிகளாக சிங்கள பாடநெறி வளவாளர்களான மாவட்ட உளவள துனை உதவியாளர் ஏ.மனூஸ்,ஏ.பி ஆரிபின்,கலாச்சார உத்தியோகத்தர் ரஸ்மி எம் மூஸா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வு தேசிய ஒருமைப்பாட்டு உத்தியோகத்தர் எம் ஏ.எம் வாஜீத் அலியின் ஒருங்கினைப்பின் கீழ் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

கல்முனை பிரதேச முஸ்லிம் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும்: ஹக்கீம் உறுதி

கல்முனை பிரதேச முஸ்லிம் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும்: ஹக்கீம் உறுதி

முதலீடு செய்வதற்கு நாட்டில் உகந்த சூழல் : ஜனாதிபதி உறுதி

முதலீடு செய்வதற்கு நாட்டில் உகந்த சூழல் : ஜனாதிபதி உறுதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGallery