தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Election Commission of Sri Lanka Election General Election 2024
By Laksi Jan 07, 2025 07:59 AM GMT
Laksi

Laksi

பொதுத்தேர்தலுடன் தொடர்புடைய வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் தொடர்பான கோப்புகளை பூரணப்படுத்தி சட்ட நடவடிக்கைகளுக்காக விரைந்து பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு தேர்தல் ஆணைக்குழு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்ததுடன், அந்தக் காலம் நிறைவடைந்த போதிலும் வேட்பாளர்கள் குழு வருமான அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியன்மார் அகதிகள் குறித்து ரிஷாட் எம்.பி ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

மியன்மார் அகதிகள் குறித்து ரிஷாட் எம்.பி ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

சட்ட நடவடிக்கை

அதன்படி, வருமானம் மற்றும் செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தற்போது தயாராகி வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு | Election Commission Action Notification

இதேவேளை, எதிர்வரும் வாரத்தில் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை வழங்காத 5 ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

12 ஜனாதிபதி வேட்பாளர்கள் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை வழங்கவில்லை மற்றும் அவர்களில் 7 பேர் மீது இதுவரை வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 38 பேர் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டம்: பிரதமர் அறிவிப்பு

பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டம்: பிரதமர் அறிவிப்பு

இலங்கையின் விளையாட்டுத் துறை வளர்ச்சிக்கு ஆதரவு தெரிவித்த இந்தியா

இலங்கையின் விளையாட்டுத் துறை வளர்ச்சிக்கு ஆதரவு தெரிவித்த இந்தியா

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW