இலங்கையின் விளையாட்டுத் துறை வளர்ச்சிக்கு ஆதரவு தெரிவித்த இந்தியா

Sri Lanka India Sports
By Laksi Jan 07, 2025 06:56 AM GMT
Laksi

Laksi

இலங்கையின் விளையாட்டுத் துறை வளர்ச்சிக்கான நிபந்தனையற்ற ஆதரவை இந்தியா வழங்குவதாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகே இடையில் நடந்த சந்திப்பில் இந்த விடயம்  உறுதியளிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டம்: பிரதமர் அறிவிப்பு

பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டம்: பிரதமர் அறிவிப்பு

இருதரப்பு உறவு

அத்தோடு, இந்திய உயர்ஸ்தானிகர், கிரிக்கெட் உட்பட பல விளையாட்டுகளுக்கு ஆதரவு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் விளையாட்டுத் துறை வளர்ச்சிக்கு ஆதரவு தெரிவித்த இந்தியா | India Supports Sri Lanka S Sports Development

மேலும், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான இலக்கையும் அவர் வலியுறுத்தினார்.

இந்த ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இந்திய இளைஞர் விவகாரப் பிரிவுக்கு வருகை தருமாறு இலங்கையின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சரை உயர்ஸ்தானிகர் ஜா அழைத்துள்ளார்.

இந்த சந்திப்பில், இலங்கையின் இளைஞர் விவகாரத் துறை மற்றும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

நாடாளுமன்ற நிதிக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

நாடாளுமன்ற நிதிக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW