நாடாளுமன்ற நிதிக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

Parliament of Sri Lanka SJB Shanakiyan Rasamanickam Sri Lanka Politician
By Laksi Jan 07, 2025 06:19 AM GMT
Laksi

Laksi

நாடாளுமன்ற நிதிக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சத்துரங்க அபேசிங்க, சாணக்கியன் இராசமாணிக்கம், கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன மற்றும் ஆர்கம் இல்யாஸ் ஆகியோரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய வருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று (07) ஆரம்பிக்கப்பட்டதுடன் இந்த நியமனங்கள் தொடர்பான அறிவிப்பு அவரால் வெளியிடப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டம்: பிரதமர் அறிவிப்பு

பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டம்: பிரதமர் அறிவிப்பு

நிதிக்குழு

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நிதிக்குழுவின் தலைவராக முன்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற நிதிக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் | Appointment New Members Finance Committee

2025 ஆம் ஆண்டுக்கான முதல் வார நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்று ஆரம்பமானது.

இதன்போது, முக்கிய சில விடயங்கள் தொடர்பில் சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை சபை அமர்வுகள் இடம்பெறவுள்ளதுடன், உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் துறைசார் அமைச்சரால் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் வெற்றிடம் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்

ஆசிரியர் வெற்றிடம் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW