இன்றிரவுடன் நிறைவடையவுள்ள தேர்தல் பிரசாரங்கள்
தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகின்றது.
இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரங்கள்
எதிர்வரும் 6ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்த விடயம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.
இன்றைய தினத்துக்கு பின்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக எந்தவொரு வேட்பாளரும் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இன்று இடம்பெறும் இறுதி தேர்தல் பிரச்சார கூட்டங்களின் காணொளி மற்றும் மேலதிக விபரங்களை தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளில் பிரதான ஒரு செய்தியில் மாத்திரம் பிரசுரிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |