மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழப்பு

Sri Lankan Peoples Death
By Rakshana MA Aug 13, 2025 04:41 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு (Batticaloa)- போரதீவுப்பற்று வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தும்பங்கேணி கிராமத்தில் மின்சாரக் கம்பியில் சிக்குண்டு மின்சாரம் தாக்கியதில் 70 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்று முன்தினம் மாலை (11) இடம் பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் போது போரதீவுப்பற்று பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 70வயதான தங்கராசா - சுந்தரராசி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

திருமலையிலுள்ள சட்ட விரோதமான கட்டடத்தை அகற்ற எச்சரிக்கை!

திருமலையிலுள்ள சட்ட விரோதமான கட்டடத்தை அகற்ற எச்சரிக்கை!

மின்சார தாக்குதல் 

வீட்டுக்கு தற்காலிக மின்சார இணைப்பை பெற முற்பட்டபோது மின்சாரம் தாக்கியவரை அயலவர்களின் உதவியுடன் பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு வந்தனர்.

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழப்பு | Elderly Man Dies In Electrocution

பழுகாமம் பிரதேசவைத்தியசாலைக்கு வரும்போது இறந்துள்ளனர் என தெரியவந்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

சம்மாந்துறை பொலிஸ் நிலைய 2025 ஆண்டிற்கான அரையாண்டு அணிவகுப்பு மரியாதை

சம்மாந்துறை பொலிஸ் நிலைய 2025 ஆண்டிற்கான அரையாண்டு அணிவகுப்பு மரியாதை

கல்முனை நாகூர் ஆண்டகை தர்கா வரலாறு நூலுருவாக்கம்

கல்முனை நாகூர் ஆண்டகை தர்கா வரலாறு நூலுருவாக்கம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery