கட்சி பேதமின்றி பொருளாதாரத்தை நிலைநாட்ட வேண்டும்: ஜீவன் தொண்டமான்
கட்சி பேதமின்றி பொருளாதாரத்தை நிலைநாட்ட வேண்டுமானால் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பொகவந்தலாவையில் நேற்று (18) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் மீண்டுமொரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் நாட்டு மக்கள் பாரிய கஷ்டத்தை எதிர்நோக்க நேரிடும்.பொருளாதார நெருக்கடியில் இருந்து நாம் இன்னும் வெளிவரவில்லை மக்கள் இதனை புரிந்தது கொள்ள வேண்டும்.
பொருளாதார நெருக்கடி
மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது போர் இடம் பெற்று கொண்டுக்கிறது.இதனால் எண்ணெய்யை கொள்வனவு செய்வதில் சிக்கல் நிலை ஏற்படும்.
கொரோனா தொற்றுக்கு பிறகு மலையகத்தில் வருமை நிலை 5 சதவீதமாக காணப்படுகிறது.மலையகத்தின் பிரதிநிதித்துவத்தை நாம் கட்சி பேதமின்றி வென்றெடுக்க வேண்டும்.
நமக்குள் காணப்படுகின்ற பிரிவினைகள் மற்றும் அரசியல் வேறுபாடுகள் காரணமாக ஆறு உறுப்பினர்கள் வரவேண்டிய இடத்தில் மூன்று உறுப்பினர்கள் வருவதற்கு அதிகமான வாய்ப்புகள் காணப்படுகிறது இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க கூடாது என ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |