கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்த வலயக்கல்வி பணிப்பாளர்கள்
Trincomalee
Eastern Province
Education
By Laksi
கிழக்கு மாகாண வலயக்கல்வி பணிப்பாளர்கள் மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவை (Jayantha Lal Ratnasekera) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த கலந்துரையாடலானது நேற்று (17) திருகோணமலை (Trincomalee) ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
கல்வி நடவடிக்கை
இதன்போது, கல்வி நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதில், கிழக்கு மாகாணம் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதோடு, அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |