கிழக்கு மாகாணத்திற்கு 1713 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

Sri Lankan Peoples Eastern Province
By H. A. Roshan Aug 11, 2025 12:31 PM GMT
H. A. Roshan

H. A. Roshan

கிழக்கு மாகாண முதலமைச்சின் மாதாந்த முன்னேற்ற மதிப்பாய்வுக் கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த குழுகூட்டமானது, கிழக்கு மாகாண முதலமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், முதலமைச்சிற்குச் சொந்தமான நிறுவனங்களால் மட்டும் கிழக்கு மாகாணத்தின் வளர்ச்சிக்காக ரூ.1713 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது,

காசா மருத்துவமனை அருகே அல் ஜெஸீரா நிருபர்கள் படுகொலை

காசா மருத்துவமனை அருகே அல் ஜெஸீரா நிருபர்கள் படுகொலை

நிதி

அதேவேளை, அந்த நிதியைக் கொண்டு செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.  

இந்தக் கூட்டத்தில், முதலமைச்சினால் நிர்வகிக்கப்படும் 45 உள்ளூராட்சி நிறுவனங்களின் (நகராட்சிகள், நகர சபைகள், பிரதேச சபைகள்) மற்றும் உள்ளூராட்சித் துறை, கிராமப்புற தொழில்துறைத் துறை, சமூக சேவைகள் துறை மற்றும் சுற்றுலா பணியகம் ஆகியவற்றின் திட்ட முன்னேற்றம் மதிப்பாய்வு செய்யப்பட்டது.

கிழக்கு மாகாணத்திற்கு 1713 மில்லியன் ரூபா ஒதுக்கீடு | Eastern Province Progress Review 1713 Million

இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து திட்டங்களையும் முடிக்குமாறு ஆளுநர் நிறுவனத் தலைவர்களுக்கு அறிவுறுத்தினார்.

அத்தோடு " Know Your Road Sign " உங்கள் சாலை அடையாளத்தை அறிந்து கொள்ளுங்கள்” என்ற தலைப்பில் முதலமைச்சினால் தொகுக்கப்பட்ட வீதி அடையாளங்கள் குறித்த புத்தகமும் இங்கு வழங்கப்பட்டது.

இதில் மாகாண பிரதம செயலாளர் தலங்கம மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பில் மர்மமான முறையில் உயிழந்த இளைஞன்

மட்டக்களப்பில் மர்மமான முறையில் உயிழந்த இளைஞன்

நெல்லுக்கு குறைந்த விலை : அரசை விமர்சிக்கும் விவசாயிகள்

நெல்லுக்கு குறைந்த விலை : அரசை விமர்சிக்கும் விவசாயிகள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery