நாட்டில் இனிமேல் இன மத வேறுபாடுகளுக்கு இடமில்லை: கிழக்கு ஆளுநர்

Batticaloa Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Eastern Province General Election 2024
By Laksi Nov 22, 2024 01:35 PM GMT
Laksi

Laksi

நாட்டில் இனிமேல் இன மத வேறுபாடுகளுக்கு இடமில்லை என கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர (Jayantha Lal Ratnasekera) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று (22.11.2024) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு ,நடந்து முடிந்த நாடாளுமன்ற பொது தேர்தலில் தமிழர்கள் முஸ்லிம்கள் எல்லாரும் ஒற்றுமையாக வாக்களித்து வெற்றியை எமக்கு வழங்கியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் மின்சார சபைக்கு எதிராக பிரதேச மக்கள் போராட்டம்

மட்டக்களப்பில் மின்சார சபைக்கு எதிராக பிரதேச மக்கள் போராட்டம்

தமிழில் கடமை

அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழரது பகுதிகளில் எனக்கு தமிழில் கதைப்பதற்கு விருப்பம். திருகோணமலையில் கடந்த 35 வருடங்களுக்கு முன் தமிழர்களுடன் இணைந்து வாழ்ந்து வந்தோம்.

நாட்டில் இனிமேல் இன மத வேறுபாடுகளுக்கு இடமில்லை: கிழக்கு ஆளுநர் | Eastern Province Governor Speech In Batticaloa

தற்போது மாகாண ஆளுநர் அலுவலகத்தில் அதிகமான நேரங்களில் தமிழில்தான் கடமைகளை முன்னெடுத்து வருகின்றேன்.

நேற்று ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், நாட்டில் இனிமேல் இன மத வேறுபாடுகளுக்கு இடமில்லை என்றும், இனிமேல் நாம் எல்லாரும் இலங்கையர் மட்டும்தான், என தெரிவித்துள்ளார்.

இனி நாம் அனைவருக்கும் ஒரே நாடு இலங்கை என்ற அடையாளம் மட்டும்தான். எனவே கிழக்கு மாகாணத்தை கட்டி எழுப்ப அனைவரது ஒத்துழைப்பையும் நான் வேண்டி நிற்கின்றேன்’’ என்றார்.

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் தங்க விலை

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் தங்க விலை

அதிக விலைக்கு பொருள் விற்பனை: வர்த்தகர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அதிக விலைக்கு பொருள் விற்பனை: வர்த்தகர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW