ஜனாதிபதிக்கு கொடுத்த அவகாசம் நாளையுடன் நிறைவு: மீண்டும் நினைவுப்படுத்தும் கம்மன்பில
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான இதுவரை வெளியிடப்படாத இரண்டு அறிக்கைகளை வெளியிட ஜனாதிபதிக்கு கொடுத்த அவகாசம் நாளையுடன் (21) முடிவடைகின்றதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கால அவகாசம்
மேலும் தெரிவிக்கையில், நான் ஜனாதிபதிக்கு கால அவகாசம் ஒன்றை கொடுத்திருந்தேன். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியிட தயங்கும் இரண்டு அறிக்கைகளை எதிர்வரும் 21ஆம் திகதி வெளியிடுமாறு, நான் ஜனாதிபதிக்கு வழங்கியிருந்த கால அவகாசமானது நாளை காலை 10 மணியுடன் முடிவடைகிறது.
ஆனால் இதுவரையில் இது தொடர்பாக எந்த கருத்தும் வெளியாகவில்லை.
இவ் அறிக்கையை மக்கள் மத்தியில் வெளிக்கொணர்வதன் மூலம் புதிய அரசாங்கமானது தனது பொறுப்பை நிறைவேற்றியுள்ளது. அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டுக்களை தவிர்க்க நாளை காலை வரையும் அவகாசம் உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ஜனாதிபதி நாளை காலைக்குள் அறிக்கைகளை வெளியிட தவறினால் நான் நிச்சயமாக அறிக்கைகளை முன்வைப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |