வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் கவனம்
டிசம்பரில் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை தாக்கல் செய்வோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அந்த வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தங்காலையில் வைத்து நேற்றைய தினம் (19) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ஆரம்பத்தில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது நமது மிகப் பெரிய சவாலாக இருந்தது. நாங்கள் அதை செய்துள்ளோம்.
மாணவர்களுக்கு கொடுப்பனவு
முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்குவதில் கவனம் செலுத்தி வருகின்றோம்.
நாடாளுமன்றத்தில் நாம் பலம் பொருந்தியவர்களாக இருக்க வேண்டும், நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியின் பண்புகளுடன் பலமாக இருக்க வேண்டும்.
இந்த நாட்டை படிப்படியாக வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |