உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எப்.பி.ஐ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Sri Lankan Peoples Easter Attack Sri Lanka
By Rakshana MA 13 days ago
Rakshana MA

Rakshana MA

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக சஹ்ரான் ஹாசிம் செயற்பட்டுள்ளதாக எப்.பி.ஐ. அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

2020 டிசம்பர் 11 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட எப்.பி.ஐ. அறிக்கையில், 2019 இல் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுக்கு முக்கிய சூத்திரதாரியாக சஹ்ரான் ஹாசிம் தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் எப்.பி.ஐ. (FBI) மூலம், கலிஃபோர்னியாவின் அமெரிக்க நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு முக்கியமான ஆணையிலேயே 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் என உறுதியுடன் அடையாளம் காணப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அதிகரித்துள்ள முறைப்பாடுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அதிகரித்துள்ள முறைப்பாடுகள்

தாக்குதல் 

இலங்கையில், தேவாலயங்களையும் ஹோட்டல்களையும் இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 268 பேர் கொல்லப்பட்டனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எப்.பி.ஐ வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Easter Attack Main Suspect Zahran Hasim

நுட்பமான நீதிமன்ற சாட்சியங்கள், சமூக ஊடக பதிவுகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட எப்.பி.ஐ அறிக்கையில், இலங்கையில் இயங்கிய உள்ளூர் ஐ.எஸ் அமைப்பை சஹ்ரான் ஹாசிம் வழிநடத்திய விதமும், அந்த தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் திட்டத்தை எப்படி திட்டமிட்டார் என்பதையும் விளக்குகிறது.

இந்த அறிக்கை மிக முக்கியமான ஆதாரங்களைக் கொண்டிருந்த போதிலும், இலங்கையினால் இது புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இலங்கை உண்மையான ஆதாரங்களின் அடிப்படையில் நீதியை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற அவசியத்தை எப்.பி.ஐ. யின் அறிக்கையின் உறுதித்தன்மை சுட்டிக்காட்டுகின்றன. 

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

         நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW