ரஷ்யாவில் பாரிய நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை தொடர்பில் தகவல்
ரஷ்யாவின் (Russia) கிழக்கே உள்ள கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் இன்று (18) அதிகாலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதுடன், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கை
இந்த நிலநடுக்கத்தையடுத்து அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்த போதிலும், பின்னர் அது சுனாமி நிலை அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் பசிபிக் பெருங்கடலில் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும் பகுதியில் ஏற்பட்டுள்ளதுடன், முதல் நிலநடுக்கத்திற்குப் பிறகு பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கடற்பகுதியில் பல எரிமலைகள் உள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |