துருக்கியின் இஸ்தான்புல் நகரில் வலுவான நிலநடுக்கம்
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்று இன்று(23) பதிவாகியுள்ளது.
மாகாணம் முழுவதும் அவசரகால குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக துருக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், அவசரகால குழுக்கள் கள ஆய்வுகளைத் தொடங்கியுள்ளதாக துருக்கியின் உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா கூறியள்ளார்.
வலுவான நிலநடுக்கம்
இந்நிலையில், அதிகாரிகள் இதுவரை எந்த உயிரிழப்புகளையும் பதிவு செய்யவில்லை என தெரிவித்துள்ளர்.
பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை பிரசிடென்சி (AFAD) படி , 6.92 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், சிலிவ்ரி நகராட்சியின் கடற்கரையில் பதிவாகியுள்ளது.
இஸ்தான்புல் குடியிருப்பாளர்கள், கட்டிடங்கள் இடிந்து விழும் எனும் அச்சத்தில் வீட்டிலிருந்து வெளியேறி வீதிகளுக்கு சென்றுள்ளனர் என ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |