கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறப்பு! மக்களுக்கான அறிவித்தல்

Sri Lankan Peoples Climate Change Weather
By Rakshana MA Jan 22, 2025 10:01 AM GMT
Rakshana MA

Rakshana MA

கன மழையினால் கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்ற காரணத்தினால் மேலும் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதன்படி, பத்து வான் கதவுகளில், ஏற்கனவே இரண்டு வான் கதவுகள் இரண்டு அடி நீரை வெளியேற்றுவதற்கு திறக்கப்பட்டிருந்தன.

அரச ஊழியர்களுக்கான இரண்டாம் மொழி கற்கை நெறி சான்றிதல் வழங்கும் நிகழ்வு

அரச ஊழியர்களுக்கான இரண்டாம் மொழி கற்கை நெறி சான்றிதல் வழங்கும் நிகழ்வு

திறக்கப்படும் வான்கதவுகள்

இந்த நிலையில், மேலும் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ன. இதன் மூலம் நான்கு அடி நீரை வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறப்பு! மக்களுக்கான அறிவித்தல் | Due To Heavy Rains Skylights Are Open In Kantalai

அத்துடன், கந்தளாய் குளத்தின் மொத்த நீரின் கொள்ளளவு 114,000 ஏக்கர் அடியாகும். ஆனால், கன மழையின் காரணமாக தற்போது நீரின் கொள்ளளவு 113,222 ஏக்கர் அடியாக உயர்ந்துள்ளது எனவும், தற்போது நாளொன்றுக்கு 1600 கன அடி அளவு நீர் வெளியேறி வருகின்றதாகவும் கந்தளாய் நீர்பாசன பொறியியலாளர் சிந்தக்க சுரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

தேங்காய் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!

தேங்காய் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!

மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பலர் முகாம்களில் தஞ்சம்

மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பலர் முகாம்களில் தஞ்சம்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGallery