கல்முனையில் வெள்ளப் பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு
அண்மையில் பெய்த அடை மழை காரணமாக வெள்ளப் பாதிப்பிற்குள்ளான கல்முனை- துரைவந்தியமேடு மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நிகழ்வானது குளியாப்பிட்டிய நெவகட செல்கிரி விகாரஸ்தான கலன மித்துரு சங்கத்தின் ஏற்பாட்டில் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திகவின் வழிகாட்டலில் கல்முனை பொலிஸ் நிலையத்தின் சமூக பொலிஸ் பிரிவின் பொறுப்பாளர் பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ எல்.ஏ.வாஹிட் நெறிப்படுத்தலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது , மழை வெள்ள நீரினால் பாதிக்கப்பட்ட துரைவந்தியமேடு பகுதியில் வசிக்கும் சுமார் 65 குடும்பங்களுக்கான உலர் உணவு நிவாரண பொதிகளே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
உலர் உணவுப்பொதிகள்
அத்துடன் வெள்ள நீர் காரணமாக தமது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கும் பெறுமதியான உணவுப் பொருட்களை அவ்வமைப்பு வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த உணவு பொதியில் அரிசி,பருப்பு,சீனி,பால் மா ,பிஸ்கட் ,டின் மீன், நெத்தலி,உப்பு,தேயிலை,மிளகாய்த்தூள் இஎன்பன உள்ளடங்கியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |