அநுர அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க நாங்கள் தயார் : ரிஷாட்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசியல் மேடைகளில் கொடுத்த வாக்குகளை பறைசாற்றும் வகையில் இந்த நாடாளுமன்றிலுள்ள 159 உறுப்பினர்களும் நேர்மையாக உழைத்தால் நாங்களும் எதிர்கட்சியில் இருந்து கொண்டு 100 சதவீதம் ஆதரவினை தர தயாராகவுள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(04) இடம்பெற்ற அமர்வின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கடந்த தேர்தல் மேடைகளில் வரலாறுகள் பேசியதைப் போன்று இந்த நாடாளுமன்றிலும் பேசினால் நாடு இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டு தான் போகும்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
நாடாளுமன்றம் வரும் வழியில் சந்தைக்கு சென்று வந்தேன். அனைவரும் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும்.
அத்துடன் இலங்கை வீழ்ச்சியடைந்திருந்த போது அந்நிய நாடுகளினால் செய்யப்பட்ட உதவிகள் நினைவில் கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |