சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்படுமா..! தீர்மானம் தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Driving Licence
By Mayuri Aug 23, 2024 03:39 AM GMT
Mayuri

Mayuri

சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வது தொடர்பில் மோட்டார் வாகன திணைக்களமோ அல்லது அரசாங்கமோ கொள்கை தீர்மானம் எடுக்கவில்லை என மோட்டார் வாகன திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த விரசிங்க தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் சாரதிகள் பெற்ற சாரதி அனுமதிப்பத்திரங்களை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் இரத்துச் செய்ய மோட்டார் வாகன திணைக்களம் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

நீர்க் கட்டணத்தைக் குறைத்து வர்த்தமானி அறிவித்தல்

நீர்க் கட்டணத்தைக் குறைத்து வர்த்தமானி அறிவித்தல்

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து வழங்க தெளிவுப்படுத்தலில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

ஓட்டுநர் உரிமத்திற்கு மதிப்பெண் வழங்கும் முறை

அவர் மேலும் தெரிவிக்கையில், எனினும் போக்குவரத்து அமைச்சுடன் ஆலோசித்து, சாலை பாதுகாப்பு தொடர்பான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஓட்டுநர் உரிமத்திற்கு மதிப்பெண் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்படுமா..! தீர்மானம் தொடர்பில் வெளியான தகவல் | Driving Licence Sri Lanka

அதன்படி, எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் இந்த புதிய முறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அடிப்படை நடவடிக்கைகள் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது என சுட்டிக்காட்டியுள்ளார். 

ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகும் சஜித்

ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகும் சஜித்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW