காத்தான்குடியில் திறந்து விடப்பட்டிருந்த வடிகான்! உயிர் தப்பிய ஒருவர்
காத்தான்குடியில் திறந்த நிலையில் வைக்கப்பட்டிருந்த வடிகானில் ஒருவர் தவறி விழுந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று(11) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் வீதியில் இடம்பெற்றுள்ளது.
எனினும் விழுந்த நபருக்கு உயிராபத்து எதுவுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திலிருந்த பொது மக்களினால் காப்பாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், வட்டார மக்கள் ஆவேசத்துடன் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
"வரிப்பணத்தில் வாழும் அரச அதிகாரிகள் ஏ சிக்குள் – வரிப்பணம் செலுத்தும் மக்கள் வடிகானினுள்?" என்ற ஒரே கேள்வி தற்போது அப்பகுதியை முழுவதுமாக ஆட்கொண்டிருக்கிறது.
மொலானா வட்டாரத்தில் காணப்படும் இந்த புதைகுழி வடிகானில் கடந்த பல மாதங்களாக வீதியோரம் மேல்படிகள் இல்லாது திறந்த நிலையில் இருக்கிறது. இதைப் பற்றிய முறைப்பாடுகள் பலமுறை கொடுக்கப்பட்டிருந்தும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
நிர்வாகத்தின் அலட்சியம்
"ஸ்மார்ட் சிட்டி, கிரீன் சிட்டி என்று கூறும் முன், முதலில் 'க்ளீன் சிட்டி' வேலைகளை பாருங்கள்" என மக்கள் முறையிட்டு வருகின்றனர். நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கான காரணம் என பெரும்பாலானோர் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
பொறுப்பாளர்கள் யார்? இந்த நிலைக்கு நகராட்சி நிர்வாகம், மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகள் ஆகியோருக்கு நேரடி பொறுப்பேற்பு தேவைப்படுகிறது என வலியுறுத்தப்படுகிறது.
மேலும், இவ்விடயம் குறித்து காத்தான்குடி நகர சபைக்கு தவிசாளராக வருகை தர உள்ள வைத்தியர் எஸ்.எச்.எம் அஸ்பர் இதனை கவனத்திற்கு கொண்டு விரைவாக வடிகான் மூடியை இட நடவடிக்கை எடுக்க வேண்டியது தங்களின் பொறுப்பாகும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




