புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரிக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு
புத்தளம் (Puttalam) இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரிக்கு, 430,000 ரூபாய் பெறுமதியில் ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கான தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த தளபாடங்கள் கடந்த திங்கட்கிழமை (09) கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிதி
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் (முன்னைய அரசாங்கத்தின்) பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, புத்தளம் - 05ஆம் வட்டார அமைப்பாளர் எம்.எம்.எம்.முர்ஷித்தின் வேண்டுகோளின் பேரில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்தநிகழ்வில், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மற்றும் எம்.எச்.முஹம்மத், 07ஆம் வட்டார அமைப்பாளர் ரஸீன் ஆசிரியர், இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் முகாமைத்துவ சபைத் தலைவர் அஜ்மல், செயலாளர் பொரியியலாளர் மரைக்கார், பொருளாளர் சட்டத்தரணி பாரிஸ், நிர்வாக சபை உறுப்பினர் ஹாபி உட்பட நிர்வாக உறுப்பினர்களும் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |