கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பதவியேற்ற குணநாதன்
கிழக்கு மாகாண கல்வி, விளையாட்டு, கலாசார அலுவல்கள், முன்பள்ளி கல்வி, தகவல் தொழில்நுட்பக் கல்வி, இளைஞர் விவகாரம், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம், திறன்கள் மற்றும் மனிதவள அபிவிருத்தி அமைச்சின் செயலாளாராக கே.குணநாதன் பதவியேற்றுள்ளார்.
குறித்த நியமனமானது இன்று (11.12.2024) கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் வழங்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளரா
இதன்போது, கிழக்கு மாகாண ஆளுநரால் குணநாதனுக்கு நியமனக் கடிதத்தை வழங்கி வைக்கப்பட்டதுடன் குறித்த அமைச்சில் இன்றைய தினமே அவர் தனது கடமையினை பொறுப்பேற்றார்.
முன்னாள் குச்சவெளி பிரதேச செயலாளர் மற்றும் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் என பல உயர் பதவிகளை கே.குணநாதன் வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |