இஸ்லாமியர்களுக்கு துணை நிற்கும் டொனால்ட் ட்ரம்ப்
இஸ்லாமியர்களுடன் துணை நிற்பேன் என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இஸ்லாமியர்களுக்கு ரமழான் இப்தார் விருந்தளித்த போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தெரிவித்ததாவது,
2024 அதிபர் தேர்தலில் தனக்கு ஆதரவளித்த இஸ்லாமியர்களுக்கு நன்றி. ”தேர்தலின்போது நீங்கள் எங்களுடன் நின்றதுபோல, நான் அதிபராக இருக்கும் வரை இஸ்லாமியர்களுக்கு துணையாக நிற்பேன் ”.
இப்தார் விருந்து
புனித மாதத்தில் ஒவ்வொரு நாளும், முஸ்லிம்கள் விடியற்காலை முதல் மாலை வரை நோன்பு நோற்று பிரார்த்தனை மற்றும் கடவுள் பக்தியில் தங்கள் கவனத்தை ஆழப்படுத்துகிறார்கள்.
President Trump Participates in the White House Iftar Dinner https://t.co/vc87gZR2p3
— The White House (@WhiteHouse) March 28, 2025
பின்னர் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் ஒவ்வொரு இரவும் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து சர்வ வல்லமையுள்ளவருக்கு நன்றி செலுத்துகிறார்கள், இப்தார் விருந்து மூலம் தங்கள் நோன்பை முடிக்கிறார்கள்.
நாம் அனைவரும் முழு உலகிற்கும் அமைதியைத் தேடுகிறோம் என கூறியுள்ளார்.
ஆதரவு
இந்நிலையில், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல் கடந்த அக்டோபர் 2023 முதல் இன்று வரை நீடித்து வரும் நிலையில், மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட தனது நிர்வாகத்தின் இராஜதந்திர முயற்சிகளை டிரம்ப் எடுத்துரைத்துள்ளார்.
அமெரிக்கா, எகிப்து மற்றும் கத்தார் மத்தியஸ்தம் சேர்ந்து கடந்த ஜனவரி மாதம் செய்த போர் நிறுத்தம் மார்ச் 18 அன்று முடிவடைந்த பின்னர் மீண்டும் தொடங்கியுள்ளது.
இதன்போது அனைவருக்கும் ஒரு நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான தனது உறுதிப்பாட்டை ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |