பங்களாதேஷ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது

Sheikh Hasina Bangladesh World
By Laksi Aug 06, 2024 12:08 PM GMT
Laksi

Laksi

பங்களாதேஷின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் சேக் ஹசீனாவை பதவி விலகக் கோரிய வன்முறைப் போராட்டங்களைத் தொடர்ந்து, அவர் நாட்டை விட்டு வெளியேறினார்.

இந்தநிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் தலைவர்கள் நாடாளுமன்றத்தை கலைக்க காலக்கெடுவை நிர்ணயித்த சில மணிநேரங்களுக்குப் பின்னர் ஜனாதிபதி அலுவலகத்தின இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பங்களாதேஷில் முன்னாள் பிரதமரை விடுவிக்க நடவடிக்கை

பங்களாதேஷில் முன்னாள் பிரதமரை விடுவிக்க நடவடிக்கை

கடுமையான நடவடிக்கை

அத்தோடு, தமது காலக்கெடுவை நிறைவேற்றாவிட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாணவர் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பங்களாதேஷ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது | Dissolved Parliament Of Bangladesh

இதேவேளை, ஜனாதிபதி சஹாபுதீன் தலைமையிலான கூட்டத்தின் போது "பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலீதா ஷியாவை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு திங்களன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்ரான் மஹ்ரூப்பை சந்தித்து கலந்துரையாடிய சிறீதரன்

இம்ரான் மஹ்ரூப்பை சந்தித்து கலந்துரையாடிய சிறீதரன்

48 பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள விடயம்

48 பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள விடயம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW