பங்களாதேஷில் முன்னாள் பிரதமரை விடுவிக்க நடவடிக்கை

Bangladesh World Prison
By Laksi Aug 06, 2024 10:06 AM GMT
Laksi

Laksi

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஷியாவை விடுதலை செய்ய அந்நாட்டு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஜனாதிபதி சஹாபுதீன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின்  போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்தோடு, சிறையில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களையும் விடுவிக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

சிறைத்தண்டனை

இந்தநிலையில், இரண்டு முறை பங்களாதேஷின் பிரதம மந்திரியாக இருந்த 78 வயதான ஷியா 2018 இல் ஊழலுக்காக 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் அவர் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பங்களாதேஷில் முன்னாள் பிரதமரை விடுவிக்க நடவடிக்கை | Ex Pm Released From Jail In Bangladesh

மேலும், ஒரு அறக்கட்டளைக்காக வழங்கப்பட்ட நன்கொடைகளில் சுமார் $250,000 மோசடி செய்து தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, இந்த வழக்குகள் பொய்யானவை என்றும் ஷியாவை அரசியலில் இருந்து ஒதுக்கி வைப்பதை நோக்கமாகக் கொண்டவை என்றும் பிஎன்பி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ள தங்க விலை

மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ள தங்க விலை

நற்பிட்டிமுனையில் ஓய்வு நிலை சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா

நற்பிட்டிமுனையில் ஓய்வு நிலை சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW