திருகோணமலையில் பொதுத் தேர்தல் தொடர்பாக பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டல்
திருகோணமலை மாவட்டத்தில் தேர்தல் கால சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் தொடர்பாகவும், அவற்றை மீறும் சந்தர்ப்பங்களில் அது தொடர்பாக முறையிடுதல் தொடர்பாகவும் தெளிவுபடுத்தும் செயலமர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று(18) கிண்ணியாவில் நடைபெற்றுள்ளது.
இந்த செயலமர்வு பிராந்திய ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி மற்றும் சிகிச்சை குழுக்களின் முகவர்கள், பொதுமக்கள் ஆகியோர்களுக்காக 'உங்களுடைய வாக்கு நாட்டின் எதிர்காலமாகும்' என்ற தொனிப் பொருளில் இடம்பெற்றுள்ளது.
தேர்தல் கண்காணிப்பு
View என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் அனுசரணையுடன், கிண்ணியா சமூகப் பொருளாதார அபிவிருத்தி மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில், முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, கலந்துகொண்டு, தேர்தல் கண்காணிப்பு தொடர்பாக பூரண விளக்கம் அளித்தார்.
நடைபெறவிருக்கும் தேர்தலின் போது கட்சிகள் அரச சொத்துக்களை பயன்படுத்துதல், தேர்தல் சட்டங்களை மீறிய வகையில் பிரச்சாரங்களை மேற்கொள்ளுதல், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக லஞ்சம், ஊழல் மோசடிகளில் ஈடுபடுதல், நீதியான தேர்தல் நடைபெறுவதை தடுத்தல் போன்ற விடயங்களுடன் கலந்துரையடப்பட்டுள்ளது.
தேர்தல் உரிமை
அத்தோடு, வாக்காளர்களை தமது தேர்தல் உரிமைகளை பயன்படுத்தி வாக்களிக்க செய்தல் பற்றியும் இதன் போது முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவினால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், கிண்ணியா சமூகப் பொருளாதார அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் எம். எச். லபீப், உரிமைகளுக்கான குரல் நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ. தர்ஷிகா மற்றும் View நிறுவனத்தின் உத்தியோகத்தர் வடிவேல் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |