போலி செய்திகளில் உள்ள இணைப்புக்களை கிளிக் செய்ய வேண்டாம்: மக்களுக்கு எச்சரிக்கை

Sri Lankan rupee Sri Lanka Money
By Mayuri Oct 18, 2024 05:13 AM GMT
Mayuri

Mayuri

அரசாங்கத்தால் நிதி மானியங்கள் வழங்கப்படுவதாக கூறி நிதி மோசடி இடம்பெறுவதாக கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழுவின் (CERT) சிரேஷ்ட பொறியியலாளர் சாருகா தமுனுபொல கூறியுள்ளார்.

அது குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

50000 ரூபா மானியம் வழங்குவதாக உறுதியளிக்கும் போலி செய்திகளைப் பெறுவது குறித்து, பொதுமக்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இணைப்புக்களை கிளிக் செய்ய வேண்டாம்

இவ்வாறான செய்திகளில் உள்ள எந்தவொரு இணைப்புகளையும் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும்.

போலி செய்திகளில் உள்ள இணைப்புக்களை கிளிக் செய்ய வேண்டாம்: மக்களுக்கு எச்சரிக்கை | Fake News Regarding 50000 Rs

இந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதையும் தவிர்க்கவும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW