டிப்ளோமாதாரிகளுக்கு கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Ministry of Education A D Susil Premajayantha Sri Lanka Education
By Laksi Jul 27, 2024 09:30 AM GMT
Laksi

Laksi

எதிர்காலத்தில் டிப்ளோமாதாரிகள் ஆசிரியர் தொழிலில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அனைத்துக் கல்லூரிகளும் எதிர்காலத்தில் ஒரே பல்கலைக்கழகமாக இணைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  தெரிவிக்கையில், ”2028ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் இளநிலைக் கல்விப் பட்டதாரிகளாக இருப்பார்கள்.

காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு

காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு

ஆரம்பக் கல்வி

வேகமாக மாறிவரும் அறிவுக்கு ஏற்ப, ஆசிரியர்கள், மருத்துவர்கள் என ஒவ்வொரு தொழில் வல்லுநர்களும் தங்கள் அறிவைப் புதுப்பிக்க வேண்டும்.

டிப்ளோமாதாரிகளுக்கு கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | Diploma Students In Teaching Profession

இதற்கிடையில், ஆரம்பக் கல்வியின் அடிப்படையான அழகியல் பாடத்தை ஒருபோதும் பாடத்திட்டத்தில் இருந்து நீக்க முடியாது.

புத்தளத்தில் கணித பாட ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் கைது

புத்தளத்தில் கணித பாட ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் கைது

முன்னோடித் திட்டம் 

அத்தோடு, செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களை இணைத்து பாடசாலை பாடத்திட்டம் ஆக்கப்பூர்வமாக சர்வதேச தர கல்விக்கு உயர்த்தப்படும் என்றும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

டிப்ளோமாதாரிகளுக்கு கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | Diploma Students In Teaching Profession

அதன்படி, 100 பாடசாலைகளில் முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து அந்த ஆசிரியர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்ற உரிமம் வழங்கப்படும்“ என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW