ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும், ஐக்கிய தேசியக் கட்சியிலும் உள்ள ஒரேநிலைமை! தயாசிறி
மக்களால் நிராகரிக்கப்பட்ட தரப்பினரை மீண்டும் ஆட்சியமைக்க இடமளிக்கக் கூடாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அடுத்த தலைவர் ஒருவரைத் தெரிவு செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 9 வருடங்களுக்கும் அதிக காலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகக் கடமையாற்றிய போதிலும் அவருக்குப் பின்னர் தலைவர் ஒருவர் உருவாக்கப்படவில்லை.
அடுத்த தலைவர் தெரிவு
இதன் காரணமாக சிலர் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டனர். அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சியிலும் இவ்வாறான நிலைமை காணப்படுகிறது.
பல ஆண்டுகளாக அதில் தலைவராக உள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதன் அடுத்த தலைவரைத் தெரிவு செய்வதற்குத் தயாராக இல்லை.
இவ்வாறான நிலையில் அதிகாரத்துக்காக சிலர் அரசாங்கத்துடன் இணைந்துள்ளனர். எனினும் பாரிய ஆர்ப்பாட்டங்களின் ஊடாக மக்களால் நிராகரிக்கப்பட்ட தரப்பினரை மீண்டும் ஆட்சியமைக்க இடமளிக்கக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |