பொலிஸ் மா அதிபரின் இடைக்காலத் தடையுத்தரவு: அமைச்சரவையின் தீர்மானம்
தேசபந்து தென்னகோனுக்கு (Deshabandu Tennakoon) உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்காலத் தடையுத்தரவை மறு ஆய்வு செய்து அடுத்த இரண்டு நாட்களுக்குள் தனது நிலைப்பாட்டை அறிவிப்பதாக அமைச்சரவை தெரிவித்துள்ளது.
அமைச்சரவையின் தீர்மானம் எவ்வாறாயினும், தேஷபந்து தென்னகோனுக்கு எதிரான வழக்கு முடியும் வரை பொலிஸ் மா அதிபராக பணியாற்ற முடியாது என முன்னாள் சட்டத்தரணிகள் சங்க தலைவரும் ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான திரு சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு
அத்தோடு , உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது எனவும், அதனை புறக்கணிப்பது நீதித்துறையை அவமதிக்கும் செயலாகும் எனவும் சாலிய பீரிஸ் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, பொலிஸ் மா அதிபர் பதவிக்கு மூன்று மூத்த அதிகாரிகளில் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |