தேசபந்துவின் ஹோகந்தர இல்லம் மீண்டும் சுற்றிவளைப்பு
Sri Lanka
Crime
Deshabandu Tennakoon
By Rukshy
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் (Deshabandu Tennakoon) இல்லத்தை நேற்றும் (18) மாலை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.
ஹோகந்தரவில் உள்ள அவரது இல்லமே சோதனையிடப்பட்டுள்ளது.
ஒரு வாரத்துக்கு முன்னரும் இந்த இல்லம் சோதனையிடப்பட்டது.
பல சந்தேகத்திற்குரிய பொருட்கள்
வீட்டு வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட பல சந்தேகத்திற்குரிய பொருட்கள் குறித்து நடந்து வரும் விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக காணாமல் போயுள்ள பொலிஸ் மா அதிபரை தேடும் பணிகளில் ஆறு சிறப்புக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |