நாட்டில் டெங்கு ஒழிப்பு தொடர்பில் சிறப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு

Sri Lanka Sri Lankan Peoples Dengue Prevalence in Sri Lanka
By Rakshana MA May 19, 2025 03:43 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டில் தற்போது டெங்கு ஒழிப்பு தொடர்பில் விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன்படி, இன்று முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள 15 மாவட்டங்களில் 95 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முகப்புத்தக பதிவை பகிரும் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

முகப்புத்தக பதிவை பகிரும் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

டெங்கு கட்டுப்பாட்டு மையம்

இதனிடையே, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 20,588 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் டெங்கு ஒழிப்பு தொடர்பில் சிறப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு | Dengue Prevalence In Sri Lanka

இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 3,000க்கு அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன், மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், மேல் மாகாணத்தில் சிக்குன்குன்யா நோய் தொற்றும் அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

நாளை முதல் உப்பு பற்றாக்குறைக்கு தீர்வு!

நாளை முதல் உப்பு பற்றாக்குறைக்கு தீர்வு!

மட்டக்களப்பை தாக்கிய மினி சூறாவளி!

மட்டக்களப்பை தாக்கிய மினி சூறாவளி!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW