மூதூரில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

Trincomalee Dengue Prevalence in Sri Lanka Eastern Province
By Laksi Dec 18, 2024 11:52 AM GMT
Laksi

Laksi

திருகோணமலை (Trincomalee)-மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள தோப்பூர் பிரதேசத்தில் டெங்கு பரிசோதனையும், சிரமதானமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வை இன்று (18) மூதூர் சுகாதாரப் பணிமனை மற்றும் பிரதேச சபை இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

வாகன இறக்குமதிக்கு அனுமதி: வெளியான விசேட வர்த்தமானி

வாகன இறக்குமதிக்கு அனுமதி: வெளியான விசேட வர்த்தமானி

சிரமதானப் பணி

இதன்போது, டெங்கு பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருந்தோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

மூதூரில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் | Dengue Eradication Program In Mutur

அத்தோடு தோப்பூர் உப அலுவலக ஊழியர்களினால் சிரமதானப் பணியும் முன்னெடுக்கப்பட்டது.

இந்த விசேட வேலைதிட்டத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், டெங்கு ஒழிப்பு ஊழியர்கள், மூதூர் பிரதேச சபையின் தோப்பூர் உப அலுவலக ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

2028இல் எமது அரசாங்கமே ஆட்சி அமைக்கும்: ஜனாதிபதி அறிவிப்பு

2028இல் எமது அரசாங்கமே ஆட்சி அமைக்கும்: ஜனாதிபதி அறிவிப்பு

கிண்ணியா பிரதேச விவசாயிகளுக்கு அரசாங்கத்தின் இலவச உர விநியோகம்

கிண்ணியா பிரதேச விவசாயிகளுக்கு அரசாங்கத்தின் இலவச உர விநியோகம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW