கிண்ணியாவில் டெங்கு ஒழிப்பு சிரமதான பணி
டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கிண்ணியா (Kinniya) நகரசபை பிரிவுக்குட்பட்ட கண்டலடிஊற்று பகுதியில் சிரமதான பணிகள் இடம்பெற்றுள்ளன.
குறித்த சிரமதான பணியை நேற்று (11)கிண்ணியா நகரசபைச் செயலாளர் எம். கே. அனீஸ் உத்தியோபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இதன் போது, டெங்கு நோய் பரவக்கூடிய ஆபத்தான, நீர் தேங்கி நிற்கும் இடங்கள் இனங்காணப்பட்டு, அவை துப்புரவு செய்யப்பட்டுள்ளது.
சிரமதான பணி
அத்தோடு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, ஆறுகள், ஏரிகள் ஆகியவற்றில் இருந்து குப்பைகளும் கூளங்களும் அகற்றப்பட்டு, அவை அழகுப்படுத்தப்பட்டன.
கிண்ணியா நகர சபை, கிண்ணியா பிரதேச இளைஞர் சம்மேளனம், அல் றவ்லா இளைஞர் கழகம் இணைந்து பெரண்டினா நிறுவனத்தின் முழு அனுசரணையுடன் இந்த சிரமமான நிகழ்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |