சாய்ந்தமருதில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பம்

Sri Lanka Dengue Prevalence in Sri Lanka Eastern Province Kalmunai Public Health Inspector
By Rakshana MA Nov 24, 2024 12:12 PM GMT
Rakshana MA

Rakshana MA

டெங்கு நுளம்பு பரவக்கூடிய அபாயம் காணப்படுவதில் அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேசத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த டெங்கு ஒழிப்பு திட்டமானது இன்று (24) இடம்பெற்றுள்ளது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகிலா இஸ்ஸதீனின் ஆலோசனைக்கமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன் தலைமையிலான மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்கள், டெங்கு களத்தடுப்பு உதவியாளர்கள்,சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருதமுனை வைத்தியசாலைக்கு புதிய உபகரணங்கள் அன்பளிப்பு : அபிவிருத்திக் குழு கூட்டம்

மருதமுனை வைத்தியசாலைக்கு புதிய உபகரணங்கள் அன்பளிப்பு : அபிவிருத்திக் குழு கூட்டம்

களத்தடுப்புப் பரிசோதனை

தற்போது பருவகால மழை பெய்து வருவதால் இதற்கமைய டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை கண்டறிந்து தடுப்பதற்கான டெங்கு கள தடுப்பு பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டன.

சாய்ந்தமருதில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பம் | Dengue Control Measures Start In Sainthamaruthu

மேலும் சுற்றுச்சூழலை அசுத்தமாகவும் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய வகையிலும் வைத்திருந்தவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டதுடன், சிலருக்கு எதிராக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில்,

பருவப்பெயர்ச்சி மழை காரணமாக நீர் தேங்கியுள்ள இடங்களில் பெருகும் டெங்கு நுளம்பினால் ஏற்படும் தொற்று நோய்களை தடுப்பதற்காக சாய்ந்தமருது சுகாதார பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் பரிசோதனைகளை மேற்கொண்டோம்.

மின்சார சபை ஊழியர்களுக்கான புதிய கொடுப்பனவு அறிவிப்பு

மின்சார சபை ஊழியர்களுக்கான புதிய கொடுப்பனவு அறிவிப்பு

டெங்கு நோய் ஒழிப்புத்திட்டம்

இதன் போது பொதுச் சுகாதார பரிசோதகர் பொதுச்சுகாதார மாதுக்கள் மற்றும் டெங்கு ஒழிப்பு பிரிவினர் உட்பட 10 ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

சாய்ந்தமருதில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பம் | Dengue Control Measures Start In Sainthamaruthu

இதுவரை 480 க்கு மேற்பட்ட வீடுகளில் டெங்கு நோய் சம்பந்தமான பரிசோதனைகளை மேற்கொண்டு இருக்கின்றோம்.

இருந்தபோதிலும் எவ்விதமான வீடுகளிலும் டெங்கு நோய் ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான நிலைமைகளோ அல்லது ஏற்படுத்தக்கூடிய சாத்தியமான சூழலோ இல்லை என்பது வரவேற்கத்தக்க விடயமாக காணப்படுகின்றது .

எனவே நோய்களை கட்டுப்படுத்துவதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியமாக இருப்பதுடன் இனி வருகின்ற மழை காலம் என்பதால் மழை நீர் தேங்கக்கூடிய இடங்களை இனம் கண்டு அவற்றை சுத்தப்படுத்தினால் நோய்களை கட்டுப்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

முஸ்லிம் அமைச்சரை தவிர்க்கும் அரசாங்கம் : ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் தலைவர்

முஸ்லிம் அமைச்சரை தவிர்க்கும் அரசாங்கம் : ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் தலைவர்

நில்வலா கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு!

நில்வலா கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு!

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  


GalleryGalleryGalleryGallery