மருதமுனை வைத்தியசாலைக்கு புதிய உபகரணங்கள் அன்பளிப்பு : அபிவிருத்திக் குழு கூட்டம்
மருதமுனை வைத்தியசாலை அபிவிருத்தி குழு கூட்டம் நடைபெற்றுள்ளதுடன் புதிய உபகரணங்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த அபிவிருத்திக் கூட்டமானது இன்று (24) சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்றுள்ளது.
மேலும் இது, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகிலா இஸ்ஸதீன் மற்றும் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையின் அபிவிருத்தி
இதில் மருதமுனை பிரதேச வைத்தியசாலையின் பிரதேச வைத்திய அதிகாரியும் அதன் தலைவருமான வைத்தியர் ஐ.எல்.எம். மிஹ்லார் மற்றும் சங்கத்தின் செயலாளர், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது வைத்தியசாலைக்கு தேவையான சில உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் வைத்தியசாலை முகம் கொடுக்கின்ற சவால்கள் பிரச்சினைகளை தீர்த்து வைத்து சுமுகமான முறையில் அதனை கொண்டு செல்வதற்கும் அதன் குறுங்கால மற்றும் நீண்டகால அபிவிருத்தி தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |