மின்சார சபை ஊழியர்களுக்கான புதிய கொடுப்பனவு அறிவிப்பு
இலங்கை மின்சார சபை (CEB) ஊழியர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவை எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு இலங்கை மின்சார ஊழியர் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
இலங்கை மின்சார சபை இலாபமீட்டும் நிறுவனமாக மாறியுள்ள நிலையில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்சார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால், இலங்கை மின்சார சபையின் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஊக்குவிப்பு கொடுப்பனவு
இலங்கை மின்சார சபையின் ஊழியர்களுக்குக் கடந்த 2 வருடங்களாக முந்தைய நிர்வாகம் ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இலங்கை மின்சார சபை நஷ்டம் அடையவில்லை என்றும் அது இலாபத்தில் இயங்கும் நிறுவனம் எனவும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உரிய ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்கும்போது, அனைத்து ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஒரே தொகையை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் ரஞ்சன் ஜயலால் ஊடகமொன்றிற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |