அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Sri Lanka
Dengue Prevalence in Sri Lanka
Western Province
By Laksi
மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, குறித்த மாகாணத்தில் 13,781 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, இந்த வருடத்தின் ஓகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் 33,961 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
டெங்கு நோயாளர்கள்
இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 8,179 பேர் டெங்கு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு தொற்று உறுதியானவர்களில் 16 பேர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |